கோவிலின் கான்கிரீட் பலகை இடிந்து விழுந்ததால் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் திவாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தனது ஜெராக்ஸ் கடையை திறப்பதற்காக வந்த திவாகரன் அந்த தெருவில் இருக்கும் 100 ஆண்டுகள் பழமையான பிள்ளையார் கோவிலின் எதிரே நின்றபடி சாமியை வழிபட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த கோவிலின் முன்புறம் இருக்கும் காங்கிரீட் பலகை பெயர்ந்து திவாகரன் மீது விழுந்து விட்டது. இதனால் சம்பவ இடத்திலேயே திவாகரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை அங்கு சென்று அவரின் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.