மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமாரலிங்கபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி பாண்டியராஜன் என்பவர் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது உயிரிழந்தவரின் சடலமானது அழுகிய நிலையில் இருந்துள்ளது.
இதனை அடுத்து அவரின் அருகில் இருந்த அடையாள அட்டையை ஆய்வு செய்தபோது, அந்த நபர் ஆரல்வாய்மொழி பகுதியில் வசித்துவந்த பிரான்சிஸ் கோபி என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து பாண்டியராஜன் வச்சகாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.