விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் அர்ஜுனாபுரம் பகுதியில் ரேவந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அர்ஜுனா புறத்திலிருந்து ரேவந்த் நந்த காடையூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர் நத்தகாடையூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது, திடீரென இவரது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ரோட்டில் இருந்த பனை மரத்தில் மோதி விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காங்கேயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கரேவந்துக்கு திருமணமாகி பத்து மாதமே ஆவதும், ராஜேஸ்வரி என்ற மனைவி இருப்பதும் தெரியவந்துள்ளது.