மொபட் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பொம்மை குடிப்பதில் சுரேஷ் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாடும் குப்பம் பகுதியில் வசிக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, தனது மகனுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் ஜீவா நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், இவர்களின் மொபைட்டின் மீது மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்த அப்பகுதியினர் அவர்களை உடனடியாக மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் சுரேஷ் பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.