மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் புதிய காலனியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவர் பெயிண்டிங் வேலைக்காக கிருஷ்ணகிரிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டு உள்ளார். அப்போது சேகர் கீழ்பெண்ணாத்தூர் வழியாக வந்து கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த கீழ்பெண்ணாத்தூர் பகுதியிலுள்ள அம்பேத்கர் நகரில் வசித்து வரும் வெற்றி என்பவரின் மோட்டார் சைக்கிளானது சேகரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது.
அதோடு வெற்றி ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளின் பின்புறம் தயாநிதி என்ற மற்றொரு நபரும் அமர்ந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த சேகரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதோடு இந்த விபத்தில் காயமடைந்த வெற்றி மற்றும் தயாநிதியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கீழ்பெண்ணாத்தூர் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.