கை கழுவுவதற்காக சாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் சுரேந்திரன் என்ற கார் டிரைவர் வசித்துவருகிறார். இவருக்கு நூர்ஜகான் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுரேகா மற்றும் சுனிதா என்ற மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஊருக்கு திரும்பும் போது, அங்குள்ள மரத்தடியில் உட்கார்ந்து உணவு சாப்பிட்டுவிட்டு கை கழுவுவதற்காக சுரேந்திரன் சாலையை கடக்க முயற்சிக்கும் போது அவ்வழியாக சென்ற சொகுசு காரின் அவரின் மீது பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சுரேந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் சுரேந்திரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆரல்வாய்மொழி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.