இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாலமுருகன் திருச்செந்தூரிலிருந்து குமாரபுரம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து இவர் அப்பகுதியில் உள்ள கேஸ் ஏஜென்சி அருகில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பாலமுருகனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.இந்த விபத்தில் படுகாயமடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்து படுகாயமடைந்த பார்வதி முத்து என்ற வாலிபரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பால முருகனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.