லாரியை முந்தி செல்ல முயன்ற போது மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மார் கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் திருவெண்ணெய்நல்லூரில் இருந்து விழுப்புரத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து தமிழ்செல்வன் தனக்கு முன்னால் கரும்பு லோடு ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயற்சிக்கும் போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி லாரியின் சக்கரத்தில் சிக்கி கொண்டார்.
இந்த விபத்தில் தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.