Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இப்படி ஆகும்னு நினைக்கல…. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மின்மாற்றியில் ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கணேசன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து விட்டது.

இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கணேசனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |