கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட சமயத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள் நகரில் மதனகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை பாரிமுனையில் இருக்கும் ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதன கோபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து டாக்டர்களிடம் மதனகோபால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கூறிவிட்டு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட மதனகோபால் திடீரென உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.