ரோட்டில் நின்று கொண்டு அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனுமன் நகரில் சண்முகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குல்லூர்சந்தை ரோட்டிற்கு சென்று, அங்கு ரோட்டில் நின்று கொண்டு சண்முகராஜ் தீடீரென அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சூலக்கரை போலீசார், சண்முகராஜ் ரோட்டில் ரகளை செய்து கொண்டிருந்ததைக் கண்டனர். இதனையடுத்து ரோட்டில் நின்று அவதூறாக பேசிய குற்றத்திற்காக சண்முராஜை கைது செய்த போலீசார் அவரின் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.