உக்ரைனில், ரஷ்ய படையின் தாக்குதலில் ஒரு ஏவுகணை தன் வீட்டை துளைத்த போதும் ஒரு நபர் அதனை பெரிதுபடுத்தாமல் சவரம் செய்து கொண்டிருந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர், சுமார் 120 நாட்களை தாண்டி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. எனினும், உக்ரைன் நாட்டு மக்கள் தங்கள் உயிரையும் உடைமைகளையும் இழந்து, தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
— Warlockkbg (@warlockkbg) June 23, 2022
வெடிகுண்டு சத்தம் என்பது அவர்கள் அன்றாட வாழ்க்கையோடு இணைந்த ஒன்றாக மாறிப்போனது. இந்நிலையில், ரஷ்யா ஏவிய ஒரு ஏவுகணை, ஒரு நபரின் வீட்டை உடைத்துக்கொண்டு சமயலறைக்குள் சென்றுவிட்டது.
அதனை பார்த்த பிறகும், அந்த வீட்டின் உரிமையாளர் சிறிதும் கண்டு கொள்ளாமல் அதன் பக்கத்திலேயே நின்று கொண்டு சவரம் செய்து கொண்டிருக்கிறார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.