Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த முதியவர்…. போராடி மீட்ட பொதுமக்கள்….. நடந்த துயர சம்பவம்…!!

கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள வசந்தபுரம் பகுதியில் சங்கர் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருட்டு சூழ்ந்த இடத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்துள்ளார். இவரின் சத்தம் கேட்டு அருகில் உள்ள பொதுமக்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி தீயணைப்பு வீரர்கள் மற்றும் வேலூர் தெற்கு காவல் துறையினர் அங்கு விரைந்து செல்வதற்கு முன்பாகவே சங்கரை பொதுமக்கள் இணைந்து கால்வாயை விட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர். அதன்பின் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட சங்கரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வேலூர் தெற்கு காவல்துறையினர் சங்கர் இறந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |