குளிப்பதற்காக சென்ற டிரைவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்பத்திரக்கோட்டை பகுதியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் எந்திர டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் குளிப்பதற்காக குழந்தை குப்பம் பகுதியில் உள்ள குட்டைக்கு சென்றுள்ளார். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் போது எதிபாரவிதமாக ராஜ் நீரில் மூழ்கினார்.
இதனையடுத்து அவர் மூழ்கியதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீருக்குள் குதித்து அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.