Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எங்கு தேடியும் அவரை காணவில்லை… கரையில் இருந்த உடைகள்… காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்…!!

குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இடையர் வலசை பகுதியில் வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இடையர் வலசை ஊரணி பகுதியின் கரையில் இவரின் உடைகள் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்று பார்த்த உறவினர்கள் அவரை எல்லா இடத்திலும் தேடி பார்த்துள்ளனர்.

அந்த சமயம் ஊரணிக்குள் மூழ்கி இறந்த நிலையில் வீரபாண்டியனின் உடலை உறவினர்கள் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குளிக்கச் சென்ற போது தண்ணீரில் மூழ்கி கொத்தனார் பலியானது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |