குளத்தில் தவறி விழுந்து டீ மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் ஜமால் மைதீன் என்பவர் வசித்துவருகிறார். இவர் குமந்தாபுரத்தில் இருக்கும் தனது உறவினர் டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் போகநல்லூர் செல்லும் ரோட்டில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக ஜமால் மைதீன் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஜமால் மைதீன் கால் தவறி குளத்திற்குள் விழுந்ததில், மூச்சு திணறி நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் குறித்து வழக்கு பதிவு செய்த சொக்கம்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.