Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… சடலமாக மீட்கப்பட்ட புதுமாப்பிள்ளை… கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணமான 6 மாதத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் சரண்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சரண்ராஜுக்கும், ஜெயந்தி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது ஜெயந்தி 3 மாத கர்ப்பமாக இருக்கின்றார். இந்நிலையில் சரண்ராஜ் தனது நண்பரான பாலமுருகன் என்பவருடன் சாலையோரம் இருக்கும் பாழடைந்த கிணற்றின் மீது அமர்ந்து பேசியுள்ளார்.

அப்போது சரண்ராஜ் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு கட்டி நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சரண்ராஜின் சடலத்தை மீட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |