Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நல்லா தான் என்ஜாய் பண்ணிட்டு இருந்தோம்…. திடீர்னு இப்படி ஆகிருச்சு… வாலிபருக்கு நடந்த விபரீதம்…!!

குளித்துக்கொண்டிருக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள முத்துராமலிங்கம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா மகேஸ்வரன் என்ற பி.பி.ஏ பட்டதாரி மகன் உள்ளார். இந்நிலையில் உமாமகேஸ்வரன் முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் இருக்கும் கிணற்றுக்கு தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது குளித்துக் கொண்டிருந்த உமா மகேஸ்வரனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு அவருடைய நண்பர்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கிய உமா மகேஸ்வரனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு உமாமகேஸ்வரியின் சடலத்தை மீட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த சாத்தூர் டவுன் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவரின் உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |