குளித்துக்கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சேர்வைகாரன்பட்டி பகுதியில் ஆத்தியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் ஊருக்கு கீழ்புறம் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இவருடைய நண்பர்கள் இருவரும் குளக்கரைக்கு சென்றுவிட்டதால், ஆத்தியப்பன் மட்டும் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக ஆத்தியப்பன் கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.
இதனையடுத்து அங்கு வந்த அவருடைய நண்பர்கள் கிணற்றின் சுவற்றின் மீது துணிகள் மட்டும் இருந்ததால் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் ஆத்தியப்பன் கிடைக்காததால் உடனடியாக தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரவு 9 மணிவரை தேடியும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.