சீனாவில் நபர் ஒருவர், மலச்சிக்கல் ஏற்பட்டதால், அதனை சரிசெய்ய 20 செ.மீ நீளம் கொண்ட விலாங்கு மீனை ஆசனவாயினுள் நுழைத்திருக்கிறார்.
சீன நாட்டின் Jiangsu என்ற மாகாணத்தில் இருக்கும் Xinghua என்ற பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளானார். எனவே, குடல் சீராக இயங்க, சுமார் 20 செமீ நீளம் கொண்ட விலாங்கு மீனை தன் ஆசனவாயினுள் திணித்துவிட்டார். அப்போது, எதிர்பாராமல் அந்த மீன் அவரின் அடிவயிற்றினுள் புகுந்துவிட்டது.
எனவே கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அதன் பின்பு, அவருக்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் செய்திருந்த அதிர்ச்சிகரமான செயலால் அதிர்ந்துபோனார்கள்.
இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து, அடிவயிற்றில் இருந்த விலாங்கு மீனை நீக்கினார்கள். அப்போதும் அந்த மீன் உயிரோடு தான் இருந்திருக்கிறது. எனவே, சிறுது நேரம் கழித்து அவர் மருத்துவமனைக்கு வந்திருந்தால் அவ்வளவு தான் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.