கம்போடியாவில் ஒரு கிராமத்தில் 50 முதலைகள் இருந்த குழிக்குள் ஒரு நபர் விழுந்த நிலையில் அவரை முதலைகள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கம்போடியாவில் இருக்கும் Kampong Tayong என்ற கிராமத்தை சேர்ந்த 37 வயதுடைய நபர் Sou Sothea, சுமார் ஐம்பது முதலைகளை வளர்த்து வருகிறார். அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் முதலைகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து குட்டிகளை விற்பதை தொழிலாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் Sou Sothea குடும்பத்தாரோடு மதுபானம் அருந்தி விட்டு தூங்க சென்றிருக்கிறார். அதன்பிறகு, நள்ளிரவு நேரத்தில் சிறுநீர் கழிக்க வெளியே வந்திருக்கிறார். அந்த சமயத்தில் முதலைகள் இருந்த குழிக்குள் நிலை தடுமாறி விழுந்து விட்டார். அவரை முதலைகள் குதற தொடங்கியது.
அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து முதலைகளை கட்டையால் அடித்து அவரை குழிக்குள்ளிருந்து வெளியில் கொண்டு வந்துள்ளனர். எனினும் அதற்குள் முதலைகள் அவரை கடித்து குதறி விட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.