அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர், முகநூல் இணையதளத்தை தான் பயன்படுத்தும்போது தன்னை அடிப்பதற்காக ஒரு இளம்பெண்ணை நியமித்திருக்கிறார்.
அமெரிக்காவில் வாழ்ந்து வரும் மனீஷ் சேதி, என்ற இந்தியர் பாவ்லோக் நிறுவனத்தின் நிறுவராக இருக்கிறார். இவர் ஒரு இளம்பெண்ணை, வேலை வாய்ப்பு இணையதளத்திலிருந்து தேர்ந்தெடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளார். காரா என்ற அந்த பெண்ணிற்கு, மனீஷ் ஒரு மணி நேரத்திற்கு 500 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்.
அதாவது, தான் எப்போது முகநூல் பக்கத்திற்கு சென்றாலும், தன்னை கன்னத்தில் அடிப்பதற்காக அந்த இளம்பெண்ணை வேலைக்கு வைத்துள்ளார். முகநூல் தளத்தில் அதிக நேரம் வீணாக்குவதை தவிர்த்து, பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகத் தான் இவ்வாறு செய்தாக கூறியுள்ளார்.
மேலும், தான் காராவை பணியில் சேர்த்த பின்பு, உற்பத்தித்திறன் 40 சதவீதத்திலிருந்து 98 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் இணையதளத்தில் வைரலாக பரவியது. இவரைப் பார்த்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க், ட்விட்டர் பக்கத்தில் இரண்டு ஸ்மைலி எமோஜியை பதிவிட்டுள்ளார்.