Categories
உலக செய்திகள்

“மலையேற்றத்திற்கு சென்றவருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா!”… ஆனால் நடந்தது என்ன…?

பிரான்சில் மலையேற்றத்திற்கு சென்ற நபருக்கு கிடைத்த விலையுயர்ந்த கற்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் கடந்த 2013 ஆம் வருடத்தில் ஒரு நபர் மலையேற்றத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு ஒரு உலோகப் பெட்டி கிடைத்திருக்கிறது. அதனை திறந்து பார்த்தவர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினார். அதில், மரகதம், மாணிக்கம் போன்ற விலை உயர்ந்த கற்கள் இருந்தது. எனினும், அந்த பெட்டிக்குள் இருந்த உறையில், “Made in India” என்று எழுதப்பட்டிருந்தது.

எனவே அந்த நபர் உடனடியாக அந்த பெட்டியை உள்ளூர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அவரது நேர்மையை பலரும் பாராட்டினர். மேலும், Sylvain Merly என்ற காவல்துறை அதிகாரி கூறுகையில், அந்த விலை உயர்ந்த கற்களை பார்த்தவுடன் அவர் எடுத்து சென்றிருக்கலாம்.

ஆனால், மலை சிகரத்தில் இறந்து போன நபருக்குரியது என்று தெரிந்தவுடன், உடனடியாக காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார். இந்த கற்களின் ஒட்டு மொத்த மதிப்பு 2 லட்சத்து 46 ஆயிரம் யூரோக்கள். அதாவது கடந்த 1950 மற்றும் 1966 ஆம் வருடங்களில் ஆல்ப்ஸ் மலையில் இருக்கும்  Mont Blanc என்ற மலைச்சிகரத்தில் 2 ஏர் இந்தியா விமானங்கள் விபத்துக்குள்ளாகியது.

அதற்குப்பின், மலையேற்றத்திற்கு சென்றவர்கள், விபத்துக்குள்ளான விமானங்களின் பாகங்கள், சூட்கேஸ் போன்றவற்றை கண்டெடுத்தனர். சிலர் சடலங்களையும் கண்டெடுத்தனர். அந்த வகையில் இவருக்கு விலையுயர்ந்த கற்கள் கிடைத்துவிட்டது.

அவை, இந்திய பயணிக்குரியது என்று தெரிந்தவுடன், பிரான்ஸ் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, அந்த கற்களின் உரிமையாளர் அல்லது அவரின் குடும்பத்தார் யாரையாவது கண்டுபிடித்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டிருந்தார்கள். ஆனால், அப்படி யாரும் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், அந்த கற்களை கண்டுபிடித்துக் கொண்டு வந்த நபருக்கு, 1,50,000 யூரோக்கள் அதிகாரிகளால் வழங்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |