வாலிபர் அரசு பேருந்து கண்டக்டரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொண்டப்பநாயனபள்ளி பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பேருந்தில் பெலகொண்டபள்ளி பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பேருந்தில் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ குமார் என்பவர் பொருட்களுடன் சென்றுள்ளார்.
அப்போது பொருட்களுக்கும் டிக்கெட் எடுக்குமாறு கண்டக்டர் கௌரவ குமாரிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கௌரவ குமார் கண்டக்டரை தாக்கியுள்ளார். இதுகுறித்து மத்திய காவல் நிலையத்தில் ராஜ் குமார் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்டக்டரை தாக்கியவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.