சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு ரவி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் ரவியை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கினை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ரவிக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.