கொரோனா அச்சம் காரணமாக சைப்ரஸ் நாட்டில் இளைஞன் ஒருவன் தனது நாயை ட்ரோன் கேமரா மூலம் வாக்கிங் செய்ய அனுமதித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது
சீனாவில் தொடங்கி 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் சைப்ரஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அந்நாட்டு மக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளையும் வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்துள்ளனர். ஆனால் அந்நாட்டின் லிமாசோல் நகரை சேர்ந்த இளைஞன் ஒருவன் தான் வளர்த்து வந்த நாயை ட்ரோன் கேமரா கண்காணிப்பில் ஆளில்லா சாலையில் நடைபயிற்சி செய்ய அனுமதித்துள்ளான்.
நாயின் கழுத்தில் கயிறால் கட்டப்பட்ட ட்ரோனை வீட்டின் உள்ளே இருந்து இயக்கும் அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பலரும் ஷேர் செய்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
https://twitter.com/SkyStocknet/status/1240894872434782208