இந்தோனேஷியாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர் ஒருவர், தன் மனைவியின் பாஸ்போர்ட்டை காட்டி பர்தா உடை அணிந்து விமானத்தில் பயணம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் கொரோனா விதிமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே விமானத்தில் பயணக்கட்டுப்பாடுகளும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட DW என்ற நபர், பர்தா அணிந்து விமான நிலையம் வந்திருக்கிறார். மேலும் அவரது மனைவியுடைய பாஸ்போர்ட்டை காண்பித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல், அவரின் மனைவிக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழையும் காட்டியுள்ளார். எனவே விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டார். விமானம் நடுவானில் சென்ற போது திடீரென்று பர்தாவை கழற்றிவிட்டார். இதனை பார்த்த விமான குழுவினரும், பயணிகளும் அதிர்ந்துவிட்டனர்.
விமானத்தில் ஏறும்போது பெண்ணாக இருந்தார். தற்போது ஆணாக மாறிவிட்டார் என்று அதிர்ச்சியடைந்தனர். எனவே உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் தயாராக நின்று, விமானம் தரை இறங்கியதும், அவரை கைது செய்தனர். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
தற்போது அவரை தனிமைப்படுத்தியுள்ளனர். அதன்பின்பு அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.