லண்டனில், ரயில் நிலையத்தில் ஒரு பெண் முன்பு, ஒரு நபர் ஆடைகளை அவிழ்த்து மோசமாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தெற்கு லண்டனில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு ரயில் வந்து நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கி வந்த ஒரு நபர், அங்கிருந்த படிக்கட்டு அருகே சென்று நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ஒரு பெண் வந்திருக்கிறார். உடனே, இந்த நபர் திடீரென்று, தன் ஆடைகளை அவிழ்த்துவிட்டு அந்த பெண் முன்பு நின்றிருக்கிறார்.
அதன்பின், அங்கிருந்து அந்த நபர் சென்றுவிட்டார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த நபர் குறித்து, தகவல் அறிந்தவர்கள், உடனடியாக தங்களிடம் தெரிவிக்குமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.