அமெரிக்காவில் கடந்த 2016 ஆம் வருடத்தில் பேராஷூட் உதவியின்றி ஸ்கைடைவிங் செய்து சாதனை படைத்தவரின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த ஸ்கைடைவர் லூக் ஐகின்ஸ். கடந்த 2016 ஆம் வருடத்தில் ஜூன் 30 ஆம் தேதியன்று பேராஷூட் உதவியின்றி கடல் மட்டத்திலிருந்து 25 ஆயிரம் அடி உயரத்தில் குதித்து சாதனை படைத்தார். சுமார் 100 அடி சதுரம் உள்ள வலையில் அவர் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கலிபோர்னியாவின் பாலைவனத்தில் நிகழ்த்தப்ட்ட இந்த ஆபத்தான ஸ்டண்ட்டைக் காண்பதற்காக ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். அப்போது அவர் விமானத்திலிருந்து கீழே குதித்து மென்மையான வலை ஒன்றில் விழுந்திருக்கிறார். அதனை பார்த்த மக்கள் ஆச்சர்யத்தில் திக்கு முக்காடி ஆரவாரம் எழுப்பியுள்ளனர்.
https://twitter.com/Samir_Madani/status/1399086720906301442
அதன் பின்பு, அவர் தன் மனைவி மோனிகாவின் அருகில் வந்து, உற்சாகத்துடன் கட்டியணைத்துள்ளார். வழக்கமாக இதுபோன்ற ஸ்டண்ட் வீடியோக்கள் முதலில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, அதன் பின்பு தான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும். ஆனால் இது பயங்கரமான ஸ்டண்ட் என்பதால் தொலைக்காட்சியில் நேரடியாக, சிறப்பு நிகழ்ச்சியாக ஒரு மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதாவது முதன்முறையாக பேராஷூட் போன்ற எந்த வித பாதுகாப்பு அம்சங்களும் இன்றி மிகுந்த உயரத்திலிருந்து ஸ்கைடைவிங் செய்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். இதற்காக அவர் சுமார் இரண்டு வருடங்கள் பயிற்சி மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.