Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மனைவி, குழந்தையை காணோம்…! கதறி துடித்த இளங்கோ… வாலிபரை தேடும் போலீஸ் …!!

தாய் மற்றும் குழந்தையை கடத்திய வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஐங்குணம் என்ற கிராமத்தில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயாவதி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சங்கராபுரத்தில் உள்ள தனது மாமனாரின் வீட்டிற்கு இளங்கோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். அப்போது தனது ஒரு வயது குழந்தையுடன் யுவனேஸ்வரனுடன் மாயாவதி திடீரென காணாமல் போனார். இதனையடுத்து இளங்கோ தனது மனைவி மற்றும் குழந்தையை எல்லா இடத்திலும் தேடி அலைந்துள்ளார்.

ஆனால் அவர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தேவபாண்டலம் பகுதியில் வசித்து வந்த அருண் என்பவர் இளங்கோவின்  மனைவியையும், அவரது ஒரு வயது குழந்தை யுவனேஸ்வரனையும் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து உடனடியாக இளங்கோ சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதனை தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிந்து இளங்கோவின் மனைவி மற்றும் குழந்தையையும், அவர்களை கடத்திய வாலிபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |