காவல் நிலைய உதவி ஆய்வாளர் மினி லாரி ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாழவல்லான் அருகே குடித்துவிட்டு சிலர் தகராறு செய்துள்ளனர். அப்போது ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த முருகவேல் என்பவர் பழிவாங்கும் நோக்கத்தோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலுவின் மீது மினி லாரியை ஏற்றி கொலை செய்துவிட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று தப்பி ஓடிய குற்றவாளியான முருகவேல் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர். இதில் கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு என்பவர் கடந்த ஆண்டு கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு பின்பு அந்த நோயிலிருந்து மீண்டு பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.