Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் கொடூரத்தின் உச்சம்…. குரானை கிழித்தவரை…. கொடூரமாக தாக்கி தொங்கவிட்ட கும்பல்…!!!

பாகிஸ்தானில் மனநலம் பாதித்த ஒருவர் குரானை கிழித்ததால், மக்கள் அவரை கொடூரமாக தாக்கி கொன்று, மரத்தில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் முஸ்லிம்களை களங்கப்படுத்தும் விதமாக செயல்படுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. அதற்காக கடும் சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றது. மேலும், மரண தண்டனையும் நிறைவேற்றப்படுகிறது. அதே சமயத்தில் அந்நாட்டை பழமைவாதிகள் மற்றும் மக்கள் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவோரை அடித்துக் கொலை செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் ஜங்கல் பேரா என்ற கிராமத்தில் 41 வயதுடைய முஸ்டாக் அகமது என்ற நபர் குரானில் இருக்கும் சில பக்கங்களை கிழித்து தீயிட்டு எரித்திருக்கிறார். கடந்த சனிக்கிழமை அன்று தொழுகையை முடித்து விட்டு சென்ற மக்கள் அதனை அறிந்தவுடன் அகமதுவை அடித்திருக்கிறார்கள்.

மேலும், அவரை தரதரவென இழுத்து சென்று மரத்தில் கட்டி வைத்து, கல்லால் அடித்திருக்கிறார்கள். வலியால் அவர் கதறி துடித்திருக்கிறார். எனினும், சிறிதும் இரக்கமில்லாமல் தொடர்ந்து அவரை தாக்கி கொன்றுவிட்டார்கள். அதற்கு பிறகும் விடாமல் அந்த கும்பல் அவரை எரிக்க முயற்சித்திருக்கிறது.

காவல்துறையினரை தடுத்துவிட்டனர். அதன் பின்பு அவரின் உடலை மரத்தில் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்தவர்கள், அகமது மனநிலை சரியில்லாதவர் என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் ஒரு நபர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Categories

Tech |