Categories
உலக செய்திகள்

கர்ப்பிணியை துப்பாக்கியால் சுட்ட காதலர்கள்.. காவல்துறையினரிடம் சிக்கிய சம்பவம்..!!

கனடாவில் காதலர்கள் இருவர் சேர்ந்து ஒரு நபரை கொலை செய்துவிட்டு தலைமறைவான நிலையில் காவல்துறையினரிடம் மாட்டியுள்ளனர். 

கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் இணையதளம் மூலம் பிரபலமடைந்த Yun ‘Lucy’ Lu Li என்ற பெண்ணும் அவரின் காதலர் Oliver Karafaவும் சேர்ந்து, Tyler Pratt என்பவரையும் கர்ப்பமாக இருந்த அவரின் காதலியையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் Tyler பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது காதலி பலத்த காயமடைந்துள்ளார்.

மேலும் அவரின் குழந்தை கருவிலேயே உயிரிழந்தது. ஆனால் காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைவதற்குள் இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். மேலும் கனடாவிலிருந்து வெளியேறி ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் தலைமறைவானார்கள். இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு பிறகு கடந்த சனிக்கிழமையன்று அங்குள்ள காவல்துறையினரிடம் இருவரும் மாட்டிக்கொண்டார்கள்.

தற்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்த புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. எனவே இருவரையும் கனடாவிற்கு நாடு கடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |