வாலிபர் மதுபோதையில் இன்ஜினியரை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள சின்னகட்டளை பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துராஜா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் என்ஜினீயரான முத்துராஜா மும்பையில் இருக்கும் எண்ணெய் ஏற்றுமதி கப்பலில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது விடுமுறை காரணமாக முத்துராஜா தனது ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் முத்துராஜாவிற்கும் அதே பகுதியில் வசிக்கும் ராஜா என்ற வாலிபருக்கும் இடையே மது போதையில் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது முத்து ராஜாவை மற்றொரு ராஜா கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன்பின் படுகாயமடைந்த முத்துராஜாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முத்துராஜா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.