உறவினர் மற்றும் கிராமத்தினருடன் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்த வாலிபரை மரத்தில் கட்டி வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கடாலிமுண்டா கிராமத்தில் ராஜ்கிஷோர் பிரதான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்கள் மற்றும் கிராமத்தினருடன் மது குடித்து விட்டுஅடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் ராஜ்கிஷோர் மது அருந்திவிட்டு உறவினர்களுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது மிகுந்த கோபமடைந்த அவரது உறவினர்கள் ராஜ்கிஷோரை ஒரு மரத்தில் கட்டி வைத்தனர்.
இதனையடுத்து அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்து விட்டனர். அதன்பின் உடல் கருகிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜ்கிஷோர் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.