குடிப்பழக்கத்தை கண்டித்ததால் தன்னைத் தானே ஒருவர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள கொம்பாடி கிராமத்தில் விவேக் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு கோபிநாத் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான விவேக் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், அவரது அம்மாவும் அக்காவும் அவரை கண்டித்துள்ளனர்.
இதனையடுத்து மிகவும் மன உளைச்சலில் இருந்த விவேக் பாண்டி தனது வீட்டில் உள்ள சமையலறைக்கு சென்று அங்குள்ள கத்தியை எடுத்து தன்னைத் தானே வயிற்றில் சரமாரியாக குத்திக் கொண்டார். இதில் இரத்த வெள்ளத்தில் விவேக் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு திருமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் விவேக் உயிரிழந்தார். இச்சம்பவம் அவரது குடும்பத்தை சோகத்தில் மூழ்கடித்தது. மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.