முன்னாள் காதலி தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்து வேறு ஒருவரை காதலித்ததால் கர்ப்பிணி என்றும் பாராமல் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
லண்டனை சேர்ந்த தபால் விநியோகம் செய்யும் பெண் கெல்லி மேரி ஆரோன் என்பவரை கெல்லி காதலிக்க ஒரு வருடங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கெல்லி ஆரோனை பிரிந்து சென்றுள்ளார். ஆனால் கெல்லியின் வயிற்றில் ஆரோனின் குழந்தை வளரத் தொடங்கியுள்ளது. அதன்பிறகு தன்னுடன் பணிபுரிந்து வந்த ரோலண்ட் என்பவரை கெல்லி காதலிக்க தொடங்கியுள்ளார். கெல்லியின் பிரிவை ஏற்க முடியாத ஆரோன் சேர்ந்து வாழ அவரிடம் கெஞ்சியுள்ளார்.
ஆனால் கெல்லியோ ஆரொனிடம் உன் குழந்தை விஷயத்தில் நான் எந்த தடையும் செய்ய மாட்டேன். ஆனால் உன்னுடன் வாழ்வதற்கு என்னால் முடியாது என கூறியுள்ளார். இதனால் கோபம் கொண்ட ஆரோன் யாருக்கும் தெரியாமல் கெல்லியின் படுக்கையறைக்கு சென்று 21 முறை அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி உள்ளார். இந்த சத்தம் கேட்டு அறையினுள் வந்த உறவினர்கள் கெல்லி உயிரிழந்து கிடந்ததைக் கண்டு மருத்துவ உதவி குழுவுக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே அறுவை சிகிச்சை மூலமாக 8 மாத குழந்தையை வெளியில் எடுத்து வென்டிலேட்டரில் வைத்துள்ளனர். ஆனால் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனது. இதனிடையே கெல்லியை கத்தியால் குத்திய ஆரோன் தனக்கு ஒன்றும் தெரியாதது போல் கெல்லி குடும்பத்தினருடன் வந்து இருந்துள்ளார். ஆனால் காவல் துறையினரின் சந்தேகம் ஆரோன் பக்கம் திரும்ப அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.