ஸ்விட்சர்லாந்தில் தூங்கிக்கொண்டிருந்த தன் முன்னாள் காதலியை ஜெர்மன் நாட்டை சேர்ந்த நபர் கொன்ற வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் வருடத்தில் ஜூலை மாதம் ஜெர்மனி நாட்டை சேர்ந்த 35 வயதுடைய நபர், தன் முன்னாள் காதலியை தற்செயலாக பார்க்க நேர்ந்தது. அப்போது இவர் மது போதையில் இருந்ததால், அப்பெண்ணின் தலையில் கொடூரமாக தாக்கியிருக்கிறார். அதன்பின்பு அவரின் கழுத்தை நெரித்திருக்கிறார்.
இதில் அந்த பெண் மயக்கமடைந்து விழுந்துவிட்டார். அதன்பின்பு கத்தியால் அவரின் மார்பில் 6 தடவை குத்திவிட்டு, “உன்னை விட்டு பிரிகிறேன்” என்று ஒரு கடிதத்தை எழுதி வைத்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து, அவராகவே காவல்துறையினரிடம் சரணடைந்து விட்டார்.
நீதிமன்றத்தில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது வெளியான தீர்ப்பில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இந்த குற்றவாளிக்கு 15 வருடங்கள் சிறை தண்டனையும், 12 வருடங்களுக்கு நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு 1,60,000 பிராங்குகள் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், குற்றவாளி திட்டம் தீட்டி இந்த கொலையை செய்யவில்லை, என்றும் உடனடியாக கொலை செய்ய முடிவு எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் வெறித்தனமாக தாக்குதல் நடத்தியதில் தப்ப முடியாமல் அந்தப் பெண் பரிதவித்ததாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.