Categories
உலக செய்திகள்

“போதைப்பொருள் கொடுத்து மனைவியை கொன்ற கணவர்!”…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…..!!

அமெரிக்காவில், ஒரு நபர் தன் மனைவிக்கு சாப்பாட்டில் போதைப்பொருளை கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் இருக்கும் டேவிசன் நகரில் வசிக்கும் ஜேசன் ஹரிஸ், என்பவரின் மனைவியான கிறிஸ்டினா டேவிஸ், கடந்த 2014 ஆம் வருடத்தில் மர்மமாக மரணமடைந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில், கிறிஸ்டினா அதிகமாக போதை பொருள் எடுத்துக் கொண்டதால் உயிரிழந்ததாக தெரியவந்திருக்கிறது.

எனினும் கிறிஸ்டினாவிற்கு போதைப் பழக்கம் கிடையாது என்று அவரின் உறவினர்கள் கூறியதால், அவரின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. இந்த வழக்கு குறித்து விசாரணை  மேற்கொண்டு வந்த காவல்துறையினர், கிறிஸ்டினாவை அவரின் கணவர் ஜேசன் தான் கொலை செய்தார் என்று கடந்த 2019-ஆம் வருடத்தில் கண்டுபிடித்தார்கள்.

ஜேசன், உணவில் போதை பொருளை அதிகமாக கலந்து கிறிஸ்டினாவிற்கு கொடுத்து கொலை செய்திருக்கிறார். அதன்பின்பு, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணையில், ஜேசன் தான்  மனைவியை கொலை செய்தார் என்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

Categories

Tech |