பிரான்சில் தன் மனைவியை வாகனத்தை ஏற்றிக் கொலை செய்ததாக பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரான்சில் Prayssac என்னுமிடத்தில், பிரிட்டனை சேர்ந்த 67 வயதான David Turtle என்ற நபர், தன் மனைவியான Stephanie-மீது வேண்டுமென்றே 2, 3 முறை வாகனத்தை ஏற்றி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், David, அது விபத்து என்றும், என் மனைவியை நான் கொல்லவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து டேவிட் கூறுகையில், சம்பவம் நடந்த அன்று இரவு எங்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அதனையடுத்து நான் வீட்டிருந்து வெளியேறி வாகனத்தில் புறப்பட்டேன். என் மனைவி வாகனத்தின் பின்னால் வந்த சத்தம் கேட்டது. எனினும் இருட்டில் அவர் எங்கிருக்கிறார்? என்று தெரியவில்லை.
அதன்பின்பு, சிறிது நேரம் கழித்து தான் என் மனைவி வாகனத்தின் அடியில் மாட்டிக் கொண்டார் என்பது தெரிந்தது என்று கூறியிருக்கிறார். இந்த வழக்கு விசாரணை நேற்று தொடங்கப்பட்டிருக்கிறது. மேலும், மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.