Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அதுல எல்லா பணமும் போச்சு” மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… நீலகிரியில் பரபரப்பு…!!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடஹல்லா கிராமத்தில் செந்தமிழ் மன்னன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் சமையல்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் சசிகுமார் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகாலை 5 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற சசிகுமார் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

அப்போது கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் சாலையோரத்தில் சசிகுமார் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சசிகுமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மனைவியுடன் தகாறு ஏற்பட்டு, மன உளைச்சலில் சசிகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

Categories

Tech |