அமெரிக்காவில் ஒரு நபர் ஆறு மாதங்களாக டால்பினுடன் நெருங்கி பழகியதாக கூறியது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் Florida என்னும் பகுதியை சேர்ந்த, Malcolm Brenner என்ற 63 வயது நபர் டால்பினை காதலித்த அனுபவம் பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். Malcolm, ஒருமுறை புளோரிடாவில் இருக்கும் பூங்காவிற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த டால்பின் தன்னை ஈர்த்ததாக தெரிவித்துள்ளார்.
இது மட்டுமில்லாமல், கடந்த 1970 ஆம் வருடத்தில் ஆறு மாதங்களாக டால்பினுடன் நெருங்கியிருந்ததாகக் கூறியிருக்கிறார். இது தொடர்பில் அவர் தெரிவித்திருப்பதாவது, விலங்குகளை விரும்புவது மனிதர்களின் இயல்பு. தொடக்கத்தில் டால்பின் மீது எனக்கு அதிக விருப்பம் கிடையாது.
ஆனால், அதன் பின்பு, டால்பினை காதலிக்க தொடங்கினேன். அதற்கு, “டோலி” என்று பெயர் வைத்தேன். டோலியுடன் எனக்கிருந்த காதல் வாழ்க்கை பற்றி கூறுவதற்கு நிறைய உள்ளது. மேலும், டோலி, வேறு இடத்திற்கு சென்ற சமயத்தில், என்னை பிரிந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல், அது தற்கொலை செய்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். அந்த டால்பின் உயிரிழந்த பின் 5 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்தேன், என்றும் தன் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.