தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் இருக்கும் பஞ்சாரா ஹில்ஸ் நந்தி நகரில் 36 வயதுடைய பனோத் லாலு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் லாலு போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தனது மூத்த சகோதரரை பெற்றோர் கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் கிடைத்த 7 நிமிடத்திற்குள் பஞ்சாரா ஹில்ஸ் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது லாலு கூறியபடி அங்கு எந்த கொலை சம்பவமும் நடக்கவில்லை.
இதனையடுத்து காவல்துறையினர் லாலுவை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் பொய்யான தகவலை கூறி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் எந்த நேரமும் தயாராக இருக்கிறார்களா என்பதை சோதித்து பார்ப்பதற்காக பொய்யான தகவலை கூறியதாக லாலு தெரிவித்துள்ளார். இதனால் லாலுவின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அதன்பிறகு லாலுவை 3 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.