இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சண்முகநல்லூர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுரேஷும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சுரேஷ் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த பெண் தற்போது கர்ப்பமாக இருக்கின்றார்.
இதனை அடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சுரேஷிடம் அந்தப் பெண் கூறியதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று சுரேஷ் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.