Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படியும் பண்ணுவாங்களா…. ரகசியமான காதல் திருமணம்…. முதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

முதல் மனைவிக்கு தெரியாமல் ஒருவர் 2-ஆவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ண பாளையம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீதேவி என்ற இளம்பெண்ணை ராஜேஷ் காதலித்து வந்துள்ளார். இதனால் தனது முதல் மனைவிக்கு தெரியாமல் ஸ்ரீதேவியை கடந்த 9ஆம் தேதி ராஜேஷ் திருத்தணி முருகன் கோவிலுக்கு அழைத்து சென்று இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இதனையடுத்து ஊட்டிக்கு சென்று விட்டு அவர்கள் மீண்டும் ஆவடிக்கு திரும்பி வந்துள்ளனர். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பவித்ரா ராஜேஷிடம் இரண்டாவது திருமணம் குறித்து கேட்டபோது அவர் பவித்ராவை தாக்கியுள்ளார். எனவே ஆவடி காவல் நிலையத்தில் பவித்ரா ராஜேஷ் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதல் மனைவிக்கு தெரியாமலேயே இரண்டாவது திருமணம் செய்த ராஜேஷ் மற்றும் ஸ்ரீதேவி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |