பாகிஸ்தான் நாட்டில் ஒரு நபர் சமீபத்தில் ஐந்தாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சுமார் 62 நபர்களுடன் ஒரே குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஷவுகத் என்ற நபருக்கு ஐந்து மனைவிகள் இருக்கிறார்கள். சுமார் 62 நபர்களுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தன் அடுத்தடுத்த திருமணங்களுக்கு மற்ற மனைவிகளிடம் சம்மதம் பெற்றிருக்கிறார். இவருக்கு, நான்கு மனைவிகள் மற்றும் பெண் பிள்ளைகள் 10 பேரும், ஒரு ஆண் பிள்ளையும் இருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஐந்தாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். இந்த திருமணத்திற்க்கு மற்ற மனைவிகளும் நான்கு பெரும் மகிழ்ச்சியாக சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.