Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“மண் மாதிரிகள் சேகரிப்பு” தட்டுப்பாடின்றி கிடைக்க உத்தரவு…. அதிகாரிகளின் ஆய்வு….!!

மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரம் விவசாயிகளுக்கு வேளாண்மை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திம்மாவரம் கிராமத்தில் வேளாண்மை கூடுதல் இயக்குனர் கார்த்திகேயன், களப்பணியாளர்கள் மண் மாதிரிகள் சேகரிப்பு முறைகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது மண்ணின் தன்மை மற்றும் தேவையை அறிந்து உரம் இடுவதற்கு விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி சரியான நேரத்தில் கிடைப்பதற்கும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனையடுத்து மாவட்டத்தில் இயங்கி வரும் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதேபோன்று திருக்கழுக்குன்றம் ஒன்றியம் கீரப்பாக்கம் கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடி செய்த வயலில் களை எடுக்கும் கருவிகள் கொண்டு களை நீக்கும் பணியை அதிகாரிகள் பார்வையிட்டு மத்திய மற்றும் மாநில திட்ட பணிகளை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் மற்றும் அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்.

Categories

Tech |