நெல்லையில் ஜேசிபி ஓட்டுநர் காணமால் போனதை தொடர்ந்து அவர் கொலை செய்து புதைக்கப்பட்டாரா என்ற சந்தேகம் உருவாகி உள்ளது.
தூத்துக்குடியில் ஜேசிபி ஓட்டுநராக பணியாற்றி வந்த மாசாணம் என்பவர் பொங்கல் விடுமுறையை ஒட்டி சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்துள்ளார். பொங்கல் தினத்தன்று அவருக்கு ஒரு அழைப்பு வந்ததை தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வெளியில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இரண்டு தினங்களாக உறவினர்களும் நண்பர்களும் அவரைத் தேடி வந்துள்ளனர். இரண்டு தினங்களாக கிடைக்காத மாசாணத்தை கண்டுபிடித்து தருமாறு போலீசாரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் இடமும் மனு அளித்துள்ளனர் மாசானத்தின் குடும்பத்தினர்.
இந்நிலையில் மாசானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் காட்டுப்பகுதி ஒன்றில் கிணற்றில் மாசாணத்தில் இரு சக்கர வாகனம் கிடைப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்று சோதனையிட்டனர். அப்பொழுது அங்கு சிறிது தொலைவில் ஒரு இடத்தில் மாசானம் கொன்று புதைக்க புதைக்கப்பட்டிருக்கலாம் யூகித்து அந்த இடத்தை தோண்டி வருகின்றனர்.
புதைக்கப்பட்டது மாசாணம் தான் என்று தெரியவந்த பின்னர் வழக்கு இன்னும் வலுப்பெற்று விசாரணை நடைபெறும்.