சீன நாட்டின் சிச்சுவான் மாகாணத்தில் உணரப்பட்ட நிலநடுக்கத்தில் மாட்டி 17 நாட்களாக மாயமாகியிருந்த நபர் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இம்மாதம் ஐந்தாம் தேதி அன்று சீன நாட்டின் சிச்சுவான் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 என்ற அளவில் ரிக்டரில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் கான் யூ என்ற நீர்மின் நிலைய பணியாளரான 28 வயது இளைஞர் வெள்ளத்தில் மாட்டிகொண்டார். அவருடன் தங்கி இருந்த லூவோ என்ற சகப் பணியாளரும் அடித்து செல்லப்பட்டார்.
எங்கோ ஓரிடத்தில் இருவரும் ஒரு நாள் முழுக்க சாப்பாடு இல்லாமல் தவித்து வந்திருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து 7-ஆம் தேதி அன்று இருவரும் அங்கிருந்து வெளியேறி, சுமார் 12 மைல்கள் தூரம் நடந்து சென்றுள்ளனர். கானுக்கு பார்வை திறன் குறைவாக இருப்பதால், தன் கண்ணாடிகளை இழந்த நிலையில் மலைகள் நிறைந்த இடத்தில் நடப்பதற்கு சிரமப்பட்டிருக்கிறார்.
எனவே, லூவோ அவரை ஒரு இடத்தில் அமருமாறு கூறிவிட்டு மீட்பு குழுவினருடன் வருவதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார். அதன்படி, 8-ஆம் தேதி மீட்பு குழுவினர் லூவோவை கண்டுபிடித்து விட்டனர். ஆனால், அவர் விட்டு வந்த இடத்தில் கான் இல்லை. எனவே மலைப்பகுதிகளில் நன்கு பழக்கப்பட்ட ஒரு நபரை அழைத்துச் சென்று கானின் உடைகள் மற்றும் கால் தடம் மூலமாக சுமார் 17 நாட்களாக போராடி அவரை உயிருடன் மீட்டிருக்கிறார்கள்.
அவர் 17 நாட்களாக காட்டுப் பகுதியில் இருந்த பழங்களை சாப்பிட்டு, உயிர் வாழ்ந்திருக்கிறார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.