Categories
உலக செய்திகள்

மனைவி மீது வாகனத்தை மோதிய நபர்.. தடுக்க முயன்றவர்கள் மீது தாக்குதல்.. சீனாவில் பயங்கரம்..!!

சீனாவில் மனைவியை பழிவாங்க வாகனத்தில் வந்து மோதிய நபரை, தடுக்க முயன்ற 7 பேரை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சீனாவிலுள்ள ஜியாங்சு மாகாணத்தில் இருக்கும் நான்ஜிங் என்ற நகரத்தின் சாலையில் வேகமாக வந்த வாகனம் ஒன்று நடந்து சென்றவர்களின் மீது மோதியுள்ளது. இதில் இரண்டு பெண்களும் ஒரு நபரும் படுகாயமடைந்தனர். அதன் பின் வாகனத்திலிருந்து இறங்கிய அந்த நபர் ஒரு பெண்ணை கத்தியால் தாக்க முயன்றுள்ளார்.

அப்போது அந்த பெண்ணின் தோழியும், அங்கிருந்த மக்களும் அவரை தடுக்க முயன்றதால்  அவர்களை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இதில் படுகாயமடைந்த 7  பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய அந்த நபர், தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்.

காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அந்த பெண் அவரின் மனைவி, என்றும் அவரை பழி வாங்குவதற்காக வாகனத்தில் வந்து மோதியதாகவும்  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |